ஸ்வீடன் பூங்காவில் ஏற்பட்ட விபத்து- ஒருவர் பலி

ஸ்வீடனில் விளையாட்டு பூங்கா ஒன்றில் ரோலர் கோஸ்டர் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  9 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ள கிரோனா லுன்ட் பூங்காவில், உள்ளூர் நேரப்படி நேற்று காலை 11:30 மணியளவில் நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தை அடுத்து பூங்காவிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதுடன், பொலிஸார் மற்றும் அவசர சேவையாளர்கள் அழைக்கப்பட்டனர்.

காயமடைந்த ஒன்பது பேரில் மூவர் படுகாயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து, 140 ஆண்டுகள் பழமையான இந்த பூங்கா ஒரு வாரத்திற்கு மூடப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தையடுத்து, ஸ்வீடனின் கலாச்சார அமைச்சர் பரிஸா லிலஜெஸ்ட்ராண்ட், தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply