சட்டமா அதிபரின் பூர்வாங்க ஆட்சேபனையை நிராகரித்த நீதிமன்றம்!

2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை நிராகரிக்குமாறு கோரி சட்டமா அதிபர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் தாக்கல் செய்த பூர்வாங்க ஆட்சேபனைகள் இன்று  உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவது பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என்பதை உறுதிப்படுத்தும் நீதிமன்ற உத்தரவை இரண்டு அடிப்படை உரிமை மனுக்களும் கோரியிருந்தன.

புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகிய ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி மற்றும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை ஆகியவற்றால் இரண்டு அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனு விசாரணையின் போது பூர்வாங்க ஆட்சேபனைகளை எழுப்பி, சட்டமா அதிபர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் சம்பந்தப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு கோரினர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply