தோட்டப் பகுதியில் இறந்து கிடந்த சிறுத்தை

நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள இஞசஸ்டி தோட்டத்தில் நேற்று மாலை சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

தோட்ட தொழிலாளர்கள் இது குறித்து நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து, நல்லதண்ணி வன பாதுகாப்பு ஜீவராசிகள் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டு, சிறுத்தையின் உடல் மீட்கப்பட்டது

சிறுத்தையின் இறப்புத் தொடர்பில் ஆய்வு செய்ய
ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து,  இன்று இறந்த சிறுத்தையின் உடலை ரந்தெனிகல மிருக வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply