அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(28) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (28) வௌியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 301 ரூபா 15 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 316 ரூபா 67 சதமாகவும் பதிவாகியிருந்தது.
இதேவேளை, நேற்றைய தினம்(28)அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 301 ரூபா 25 சதமாகவும் , விற்பனை விலை 316 ரூபா 72 சதமாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.