அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் எதிர்வரும் தீபாவளிப் பண்டிகை தினத்தை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க் நகர பாடசாலைகளுக்கு தீபாவளி தினத்தன்று விடுமுறை வழங்குவது தொடர்பான மசோதா, அமெரிக்க மாகாண சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த மசோதாவில் ஆளுநர் கையொப்பமிடுவதைத் தொடர்ந்து, இது நடைமுறைப்படுத்தப்படும்.
இது, நியூயோர்க் நகர மக்களுக்கு கிடைத்த வெற்றி எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து, இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு தீபாவளியன்றும் நியூயோர்க் நகர பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.