இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்ட குளிர்பானங்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
யாழில் பாடசாலை மைதானம் ஒன்றின் திறப்பு விழாவிற்கு சென்றிருந்த நிலையில், அங்கு அவருக்கு வழங்குவதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த குளிர்பானங்கள் கலாவாதியாகியிருந்துள்ளன.
யாழ்.உடுப்பிட்டி – மகளிர் கல்லூரியில் விளையாட்டு மைதானம் ஒன்றுக்கான நிதி உதவி வழங்கும் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டுள்ளார்.
இந்தநிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்களுக்காக குளிர்பானங்கள் வழங்குவதற்கு உடுப்பிட்டியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் 4 குளிர்பான போத்தல்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
அவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டிருந்த குளிர்பான போத்தல்களை பாதுகாப்பு பிரிவினர் பரிசோதித்தபோது அது காலாவதியானமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சுகாதாரப் பிரிவு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.