பாதாள உலகக் குழுவிற்கு எதிரான அதிரடி நடவடிக்கையில் பொலிஸார்!

தென் மாகாணத்தில் விசேட அதிரடிப்படையினர் அடங்கிய குழுவொன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

அதிகளவான துப்பாக்கி சூடுகள் தென் மாகாணத்தில் இடம்பெறுவதாலேயே இவ்வாறு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் பாதாள உலகச் செயற்பாடுகளும் பதிவாகியுள்ளன.

அவற்றில் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் பதிவாகியுள்ளன.

இதன் காரணமாக மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு பொலிஸார் விசேட கவனம் செலுத்தியுள்ளனர்.

இதற்காக 600 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அடங்கிய குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக வீதித் தடைகளைப் பயன்படுத்தி அவசர சோதனைகளை மேற்கொண்டு பாதாள உலகக் குழு உறுப்பினர்களைக் கைது செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply