யாழில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயரப்புலம், அடைக்கலநாயகி தெருவில் உள்ள காணி ஒன்றிலிருந்து இன்று வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

குறித்த காணியின் உரிமையாளர் தனது காணியில் குழி வெட்டிய போது, அதில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் இருந்ததை அவதானித்ததை அடுத்து மானிப்பாய் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

தகவலை அடுத்து, பொலிஸாரால் குறித்த காணி சோதணையிடப்பட்ட போது 4 T56 ரக ஆயுதங்கள், தோட்டாக்கள், 9 T54 ஆயுதங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அந்த ஆயுதங்களையும் தோட்டாக்களையும் மீட்டதுடன் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply