தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் யாழ்.அரச அதிபர் வெளியிட்டுள்ள கருத்து!

யாழ்ப்பாணத்தில் தனியார் வகுப்புக்களை வாரத்தில் 2 நாட்கள் தடை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கிய தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பிரத்தியேக கல்வி நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமையில் மாலை நேரங்களில் தனியார் கல்வி நிறுவனங்களில் தரம் 9 வரையான மாணவர்களிற்கு வகுப்புக்களை நடத்துவதனை தவிர்க்க வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதனை ஏற்று, ஜூலை மாதம் 02 ஆம் திகதியிலிருந்து அதனை நடைமுறைப்படுத்தி ஒத்துழைப்பு நல்கிய அனைத்து தனியார் கல்வி நிறுவன நிர்வாகத்திற்கும் பிரத்தியேக வகுப்புக்களை நடத்துபவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில்  கடந்த ஜூன் மாதம் 09 ஆம் திகதி நடைபெற்ற பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக தனியார் கல்வி நிறுவனங்களிலும் பிரத்தியேக் கல்வி வகுப்புக்களிலும் வாரத்தில் ஏழு நாட்களும் கல்விச் செயற்பாடுகள் இடம்பெறுவதால் பிள்ளைகளிற்கும் சமூகத்திற்கும் ஏற்படும் சாதக, பாதக நிலைமைகள் பற்றி கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதன் பிரகாரம் குறித்த விடயத்தில் தங்களது குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஒத்துழைத்த அனைத்து பெற்றோர்களிற்கும் தனது நன்றியை தெரிவித்து நடைமுறையை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டுமென அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply