மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றை குறைப்பதற்கு தீர்மானம் மெற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதங்களை 200 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 11 சதவீதம் மற்றும் 12 சதவீதமாக குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சட்டரீதியான கையிருப்பு விகிதத்தை தற்போது நடைமுறையிலுள்ள 4 சதவிகிதம் என்ற அளவிலேயே பேணுவதற்கு நாணயச் சபை தீர்மானித்துள்ளது.