பேச்சுச் சுதந்திரம் அல்லது மத சுதந்திரம் என்ற போர்வையில் எந்த மதத்தையும் அவமதிக்க யாருக்கும் உரிமை இல்லை என புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், ” முத்துராஜா யானையை தாய்லாந்து மீளப்பெற்றதன் ஊடாக விகாரைகளில் உள்ள யானைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
எனவே, விகாரைகளில் யானைகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்படுவதுடன், அவற்றின் உடல்நிலை குறித்தும் ஆய்வு செய்யப்படும்.
இதேவேளை, மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக புதிய சட்டம் கொண்டு வரப்படும் ” எனக் குறிப்பிட்டார்.