ஒவ்வொரு நூறு கிலோகிராம் தேயிலைக்குமான செஸ் வரி 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த மாதம் 21 ஆம் திகதி பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரணவினால் வெளியிடப்பட்டுள்ளது.
தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய, இலங்கை தேயிலைச் சபை சட்டத்தின் 13 இலக்க 1 ஆம் இலக்க அ சரத்தின்படி, விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியாக ஒவ்வொரு நூறு கிலோகிராமுக்கும் 300 ரூபா அறவிடப்படும் என்ற நடைமுறையானது, ஒவ்வொரு நூறு கிலோகிராமுக்கும் 400 ரூபா செஸ் வரி அறவிடப்படும் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.