கொள்கை வட்டி விகிதங்களின் குறைப்புக்கு ஏற்ப வட்டி விகிதங்கள் குறைக்கப்படுவதால், வணிக மற்றும் அரச வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் எனவும், அதனை ஒழுங்குபடுத்தும் நேரடி பொறுப்பு மத்திய வங்கிக்கு உண்டு எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்காக மத்தியவங்கி ஆளுநருக்கும் அதன் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.
வணிக மற்றும் பிரதேச வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கவில்லை என்றால், வங்கி முறையின் சிறப்பு நேரடி ஒழுங்குமுறையை செயல்படுத்த தயாராக இருப்பதாக மத்தியவங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் முடிவை எந்தவித சந்தேகமும் இன்றி செயல்படுத்த வேண்டும் எனவும் சியம்பலாபிட்டிய உறுதியளித்தார்.
‘வணிக மற்றும் அரச வங்கிகளின் அதிக வட்டி விகிதத்தினால், பல சாதாரண மக்களும், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களும் பல சிரமங்களை எதிர்கொண்டனர். இதனால், நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
மத்திய வங்கி கடந்த வியாழன் அன்று, ஜூன் மாதத்தில் கொள்கை வட்டி விகிதங்களை 2 சதவீதத்தால் குறைத்து மீண்டும் 2.5 சதவீதத்தால் குறைத்தது. இப்போது கொள்கை வட்டி விகிதங்கள் வைப்பிற்கு 11 சதவீதமாகவும், கடன் வழங்குவதற்கு 12 சதவீதமாகவும் உள்ளது.
