‘மொல்லிகொட பூதயா’ எனப்படும் பிரபல போதைப்பொருள் வியாபாரி மகேஷ் மதுஷங்க பெர்னாண்டோவை வாத்துவ பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்படும் போது 7200 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த 21 வயதுடைய நபர், நீண்ட காலமாக வாத்துவ, மொரோந்துடுவ, வஸ்கடுவ மற்றும் பொதுப்பிட்டிய பிரதேசங்களில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும், சந்தேகநபருக்கு தற்போது ஹெரோயின் கடத்தல் தொடர்பான பல நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.