நாட்டில் குடும்ப நலப் பணியாளர்களின் பற்றாக்குறை காரணமாக எதிர்காலத்தில் தாய்,சேய் சுகாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தெரிவு செய்யப்பட்ட 1,600 பேரை குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிக்காக இணைத்துக் கொள்வதில் அரசாங்கம் இன்னும் காலதாமதம் செய்வதுவருவதாகவும் நாட்டில் குடும்ப சுகாதார சேவையாளர்களுக்கான 3000 வெற்றிடங்கள் இன்னும் காணப்படுவதாகவும் அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.