லண்டனில் இருந்து வந்த சிறுவன் கடலிற்கு நீராட சென்று பலி!

மருதங்கேணி கடலில் மூழ்கி, மீட்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த 6 வயது சிறுவன் நேற்று கடலுக்கு குளிக்கச் சென்றிருந்த நிலையில், கடலில் மூழ்கிய சிறுவன் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு, மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் லண்டனில் வசிப்பவர் எனவும் உறவினரின் மரண சடங்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடும்பத்துடன் வந்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply