மல்லாவி, பாலிநகர் பகுதியில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி,நேற்று இரவு, ஒரு குழுவினர் இறந்தவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், குறித்த இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர், சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதோடு, கொலை இடம்பெற்ற இடம் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.