அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று(10) மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (10) வௌியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 304 ரூபா 02 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 318 ரூபா 23 சதமாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.