இலங்கை மத்திய வங்கியின் பொதுக் கடன் திணைக்களம் இன்று (12) 160,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களை ஏலத்திற்கு விட்டுள்ளது.
அந்த திறைசேரி உண்டியல்களுக்காக 194,890 மில்லியன் ரூபா விலைமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
99,660 மில்லியன் ரூபா பெறுமதியான ஏலங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், 91 நாள் உண்டியல்களின் வட்டி வீதம் 17.79 முதல் 19.08 வீதம் எனவும், 182 நாள் உண்டியல்களின் வட்டி வீதம் 15.93 இருந்து 16.95 வீதம் எனவும், 364 நாள் உண்டியல்களின் வட்டி வீதம் எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த வட்டி வீதங்கள் 13.86 முதல் 14.04 சதவீதமாக.அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.