குழந்தைக்கு மயக்கமருந்து கொடுத்து கொலை செய்த தாய் – அமெரிக்காவில் சம்பவம்

அமெரிக்காவில் தனது 9 மாத குழந்தைக்கு அளவுக்கதிகமான மயக்க மருந்தை பாலில் கலந்து கொடுத்து கொலை செய்த  தாய் ஒருவர் அமெரிக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னை தூங்கவிடாமல் அழுது கொண்டே இருந்ததற்காகவே தான் மயக்கமருந்து கொடுத்ததாக குறித்த தாய் தெரிவித்தார்.

அமெரிக்காவின், நசாவ் மாகாணத்தைச் சேர்ந்த 17 வயதான சிறுமியே இவ்வாறு கைது செய்யபப்பட்டவராவார்.

கடந்த மாதம் 26 ஆம் திகதி அந்த குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு வலி நிவாரணியாகக் கொடுக்கப்படும் ஃபெண்ட்டானில் எனப்படும் மயக்க மருந்தை அதிகளவு கொடுத்ததாலேயே குழந்தை இறந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணைகளின்போது, குழந்தையை தூங்க வைக்க எண்ணிய குறித்த தாய், போதைப்பொருளான கொக்கைன் என நினைத்து, ஃபெண்ட்டானிலை பாலுடன் கலந்து கொடுத்தது தெரியவந்தது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply