கொசோவோ நாட்டின் நாடாளுமன்றதில் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது, ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கிடையே மோதல் நிலை வெடித்ததையடுத்து, ஒருவரை ஒருவர் தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அந்நாட்டின் வடக்குப் பகுதியில் செர்பிய இனத்தவருக்கிடையிலான பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருதல் தொடர்பாக, அந்நாட்டு பிரதமர் அல்பின் குர்தி பேசிக் கொண்டிருந்தபோது, எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் தான் வைத்திருந்த தண்ணீரை பிரதமர் மீது விசிறியடித்துள்ளார்.
இதனையடுத்து, ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களுக்கிடையே மோதல் நிலைமை தோன்றியுள்ளது.
மோதலின்போது ஒரு உறுப்பினருக்குக் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, நாடாளுமன்ற பொலிஸார் அங்கு வரவழைக்கப்பட்டு அனைவரும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.