வேலைவாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கு இலவச பயிற்சிகள் வழங்கல் தொடர்பான அறிவித்தல்

வடமாகாண சுற்றுலா பணியகத்தினால், வடமாகாணத்தில் வேலைவாய்ப்பற்று இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு விருந்தோம்பல் முகாமைத்துவப் பயிற்சிகளை கட்டணமின்றி வழங்கும் நோக்கத்துடன் செயற்றிட்டமொன்று முன்னெடுக்கப் பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் காலங்களில் விருந்தோம்பல் முகாமைத்துவ பயிற்சிகளை வழங்கும் அரச உயர் கல்வி நிறுவனமான SLITHM  உடன் இணைந்து வரவேற்பறை முகாமைத்துவம் மற்றும் சமையற்கலை போன்ற துறைகளில் 3 மாத பயிற்சிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பயிற்சி நெறிக்கு, வருமானம் குறைந்த குடுப்பங்களிலிருந்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதோடு, ஆர்வமுள்ளவர்கள் தங்களது பெயர் விபரங்கள் மற்றும் கல்வித் தகைமை என்பவற்றை பூரணப்படுத்தி 20.07.2023 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கத்தக்கதாக tourismnorth.srilanka@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது சுற்றுலா பணியகம், வடமாகாணம் A9 வீதி, கைதடி, யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு கடிதம் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலதிக தகவல்களுக்கு 077 794 7500 / 021 221 7311 என்னும் தொலைபேசி இலக்கங்களுடன் அலுவலக நேரத்தில் தொடர்புகொள்ளமுடியும்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply