கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான ரயில் சேவை மீள ஆரம்பம்

இடைநிறுத்தப்பட்டிருந்த அநுராதபுரம் – ஓமந்தைக்கு இடையிலான ரயில் மார்க்க போக்குவரத்து, அமைச்சர் பந்துல குணவர்தனவினால், நேற்று முன்தினம்  மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டடது.

இதையடுத்து, கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவை இன்று தனது செயற்பாடுகளை மீள ஆரம்பித்துள்ளது.

அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான ரயில் மார்க்கத்தின் திருத்தப்பணிகள் காரணமாக, கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல், கொழும்பிலிருந்து, யாழ்ப்பாணத்துக்கான நேரடி ரயில் சேவை இறுதியாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply