பேருந்து கவிழ்ந்து விபத்து – பயணிகளுக்கு காயம்

தெமோதராவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் பலர் காயமடைந்துள்ளனர்

இன்று காலை ஹாலி-எல தெமோதரவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் குறைந்தது 25 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த பயணிகள் மருத்துவ சிகிச்சைக்காக பதுளை மாகாண பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தனியாருக்குச் சொந்தமான பதுளை – கொழும்பு பேருந்து ஒன்று இவ்வாறு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply