அஜித் ரோஹனவின் மனு பரிசீலனைக்காக ஒத்திவைப்பு!

தம்மை இடமாற்றம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்  3ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனு இன்று உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply