விம்பிடள்டன் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பானிய வீரர் கார்லோஸ் அல்காரஸ் சம்பியனனார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற இறுதிப்போட்டியில் சேர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச்சை 1-6, 7-6 (8/6), 6-1, 3-6, 6-4 விகிதத்தில் அல்காரஸ் தோற்கடித்தார்.
இது கார்லோஸ் அல்காரஸுவின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டமாகும்.
அல்காரஸுக்கான சம்பியன் கிண்ணத்தை வேல்ஸ் இளவரசி கெத்தரின் கையளித்தார்.
