மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க உள்ளிட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மனுக்களை எதிர்வரும் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இன்று (17) உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி 60 சதவீதம் மின் கட்டணத்தை அதிகரித்ததன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக, உத்தரவிடக் கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன

இம் மூன்று மனுக்களும் நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோரடங்கிய குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே விசாரணைக்கு திகதி குறிக்கப்பட்டது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply