நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் கூரையில் ஏறிய நபர் – பொலிஸார் மீது குற்றச்சாட்டு

மல்சிறிபுர காவற்துறையினரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி ஒருவர் இன்று காலை குருநாகல் நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் கூரையில் ஏறியுள்ளார்.

சட்டவிரோத மதுபான வியாபாரம் தொடர்பில், மல்சிறிபுர பொலிஸார் தமக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறி, 55 வயதுடைய நபர் கூரையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தை காண ஏராளமான பொதுமக்கள் நீதிமன்றம் முன்பாக கூடினர்.

குருநாகல் மாநகர சபையின் தீயணைப்புத் திணைக்கள அதிகாரிகளுடன் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவரை கூரையிலிருந்து கீழே இறக்க முயன்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply