அங்கீகரிக்கப்படாத நிதி நிறுவனமொன்றை பராமரித்து, 2000 கோடி ரூபாவிற்கும் அதிகமான வைப்புத் தொகையை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட அக்வித்தி ரணசிங்கவும் அவரது மனைவியும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 164 மில்லியன் நிதி மோசடிக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இன்று காலை குறித்த இருவரும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்தி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, சட்டமா அதிபரால் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது.
