உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு புதுடெல்லி சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய கோடீஸ்வர தொழிலதிபர் கௌதம் அதானியை சந்தித்துள்ளார்.
பன்னாட்டு நிறுவனமான அதானி குழுமத்தின் ஸ்தாபகரும் தலைவருமான அவரது சந்திப்பின் போது, ஜனாதிபதி பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தின் தொடர்ச்சியான அபிவிருத்தி, 500 மெகாவாட் காற்றாலை திட்டம் மற்றும் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கான அவர்களின் புதுப்பித்தல் ஆற்றல் நிபுணத்துவத்தை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட இலங்கையின் கவர்ச்சிகரமான திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடலில் கவனம் செலுத்தியதாக கௌதம் அதானி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில், விக்கிரமசிங்க இன்று காலை புதுடெல்லியில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.