எல்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் நீடிப்பு

எல்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர்களின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை பிரதமர் தினேஷ் குணவர்தன வெளியிட்டுள்ளார்.

கடந்த ஜூலை 19 ஆம் திகதியிட்ட அறிக்கையின்படி, இந்த உள்ளூராட்சி மன்றத்தின் பதவிக்காலம் எதிர்வரும் நவம்பர் 04, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பி.எம்.குணவர்தன இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

நவம்பர் 26, 2019 திகதியிட்ட வர்த்தமானி இலக்கம் 2151/23 இல் வெளியிடப்பட்ட உத்தரவின் பிரகாரம், எல்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் நவம்பர் 05, 2019 முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆரம்பமானது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply