பொலிஸ் வேடமிட்டு திருடியோர் கைது

பொக்குனுவிட்ட பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போல் நடித்து பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடிய 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மில்லனிய, கஹதுடுவ, அங்குருவத்தோட்ட, பாதுக்க, கொஸ்கம, இங்கிரிய, கிரிந்திவெல மற்றும் பண்டாரகம ஆகிய பகுதிகளில் சந்தேகநபர்கள் இந்தக் கொள்ளைச் சம்பவங்களை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில் ஹொரணை பொக்குனுவிட்ட பிரதேசத்தில் வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டபோது சந்தேகநபர் வைத்திருந்த 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பிரதான சந்தேக நபர் விசாரணைகளின் போது வெளிப்படுத்திய தகவலின் அடிப்படையில் ஏனைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதான சந்தேகநபரை ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் ஜூலை 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேக நபர்களில் ஒருவரிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்களால் வெளிப்படுத்தப்பட்ட தகவலின் பிரகாரம், திருடப்பட்ட 2 முச்சக்கர வண்டிகள், 6 மோட்டார் சைக்கிள்கள், 3 தங்க பந்துகள், 2 வாள்கள், ஒரு கத்தி மற்றும் ‘பொலிஸ்’ என எழுதப்பட்ட பல சட்டைகள் மற்றும் ஜாக்கெட்டுகள் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply