மக்கள் வறுமையை உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை – விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இலங்கையில், பலர் வறுமையை உணரும் நாள் வெகு தூரத்தில் இல்லை என இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடி இயற்கையாக ஏற்பட்ட நெருக்கடியல்ல, தவறான பொருளாதார முகாமைத்துவம் காரணமாக ஏற்பட்டது என நேபாளம், மாலைதீவு மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் பொஃரிஸ் ஹடாட் சர்வோஸ் தெரிவித்துள்ளார்.

இது மனிதர்களால் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட நெருக்கடி. இதன் காரணமாக வெளிநாட்டுக்கடன் பெருமளவில் சேர்ந்தது எனத் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு மற்றும் 2022 ஆம் ஆண்டு காலத்தில் இலங்கையின் வறுமை 13.1 சத வீதத்தில் இருந்து 25 சத வீதமாக இரண்டு மடங்கு அதிகரித்தது.

2023 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த வறுமை மேலும் 2.4 சத வீதமாக அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply