இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இயற்கையாக ஏற்பட்ட நெருக்கடியல்ல மாறாக தவறான பொருளாதார நிர்வாகத்தின் விளைவே என நேபாளம், மாலைதீவுகள் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஃபாரிஸ் ஹடாட் சர்வோஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இலங்கையின் நெருக்கடி மனிதனால் உருவாக்கப்பட்ட நெருக்கடி என்றும் அதன் காரணமாக வெளிநாட்டுக் கடன் பாரியளவில் குவிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
2021 மற்றும் 2022 க்கு இடையில் இலங்கையில் வறுமை 13.1 வீதத்தில் இருந்து 25 வீதமாக இரட்டிப்பாகியுள்ளது என்றும் இந்த வருட இறுதிக்குள் (2023) வறுமை மேலும் 2.4 வீதத்தால் அதிகரிக்கும் என்றும் ஃபாரிஸ் ஹடாட் சர்வோஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பலர் வறுமையின் அதிர்ச்சியை உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.