மீண்டும் ஏவுகணை சோதனை மேற்கொள்ளும் வடகொரியா

உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்தும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டு வருகின்றது.

இதனால் கொரியா முழுவதும் பதற்ற நிலை தொடர்ந்தும் நீடித்து வருகின்றது.

இந்நிலையில், தென் கொரியாவுக்கு  ஆதரவு தெரிவித்து அமெரிக்கா சுமார் 150 டோமாஹாக் ஏவுகணைகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை அனுப்பியது.

யுஎஸ்எஸ் மிச்சிகன் எனப்படும் இந்த போர்க்கப்பல் உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றாகும்.

இந்நிலையில், வடகொரியா தனது கிழக்கு கடற்கரையில் இருந்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை கடலில் செலுத்தி சோதனை மேற்கொண்டிருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply