நாட்டிலுள்ள 90 சதவீதமான மீனவர்களுக்கு நீச்சல் திறன் இல்லை என இலங்கை உயிர்காக்கும் சங்கத்தின் நிறைவேற்று அதிகாரி அசங்க நாணயக்கார தெரிவித்துள்னார்.
பெரும்பாலான மீனவர்கள் தங்களால் நீந்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
பேரிடர் மேலாண்மை மையத்தினால் நாடு முழுவதும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளைத் தொடர்ந்து இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீனவர்களுக்கு இருக்கும் நீச்சல் திறன் கடலில் உயிரைக் காப்பாற்ற போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நீச்சல் வீரர் 10 நிமிடங்களில் அமைதியான நீரில் குறைந்தது 200 மீற்றர் தொடர்ந்து நீந்தக்கூடிய திறன் பெற்றிருக்க வேண்டும். சர்வதேச அளவுகோல்களின்படி, உயிரைக் காப்பாற்றுபவர் ஒருவரைக் காப்பாற்ற ஆறு நிமிடங்களில் 200 மீற்றர் நீந்தக்கூடிய திறன் பெற்றிருக்க வேண்டும். கடல் போன்ற வேகமான நீரில், ஒரு நீச்சல் வீரர் 400 மீற்றர்களை ஒன்பது நிமிடங்களில் நீந்த வேண்டும், மேலும் ஒரு உயிர்காப்பவர் அமைதியான நீரில் நீந்த குறைந்தபட்சம் ஆறு நிமிடங்கள் எடுக்க வேண்டும் என்பது உடற்பயிற்சி தரநிலை ஆகும்.
இலங்கையில் தினமும் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் பதிவுகள் தெரிவிக்கின்றன.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மீனவர்கள் தங்கள் உயிர்காக்கும் மேலங்கிகளை அணிவதில்லை.
அனைத்து மீன்பிடி படகுகளுக்கும் உயிர்காக்கும் மேலங்கிகள் வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை பயன்படுத்தப்படுவதில்லை, ஆனால் அவை உயிரைக் காப்பாற்ற உதவும்.
பேரிடர் மேலாண்மை மையத்தினால் வழங்கப்படும் மேலங்கிகள் தரமானவை. ஆனால் மீனவர்கள் யாரும் அவற்றை பயன்படுத்துவதில்லை. அவர்கள் கடலில் எந்த நீர் நிலையிலும் நீந்தலாம் என்பதால் அந்த மேலங்கிகள் தங்களுக்குத் தேவையில்லை என அவர்கள் கருதுகின்றனர், என்றார்.
மீனவர்கள் கடல், ஆறு அல்லது ஏரிகளில் மீன்பிடிக்கும்போது உயிர்காக்கும் மேலங்கியை அணிய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
