அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று(25) மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (25) வௌியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 323 ரூபா 03 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336 ரூபா 16 சதமாகவும் பதிவாகியுள்ளயது.
இதேவேளை, நேற்றைய தினம்(24)அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 321 ரூபா 10 சதமாகவும் , விற்பனை விலை 334 ரூபா 55 சதமாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.