ராஜாங்கனை பிரதேசத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றுக்கான பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளைப் பரிசோதிக்க சென்ற ராஜாங்கனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை, இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக பொலிஸ் உயர்அதிகாரிகளிடம் பொலிஸ் பொறுப்பதிகாரி முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த நபர் தன்னுடன் மேலும் பலரை இணைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு வந்து இவ்வாறு மிரட்டியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படும் நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.