எந்தவொரு மருந்தையும் தரம் குறைந்ததாக மதிப்பிடுவதற்கு உத்தியோகபூர்வ வரையறை எதுவும் இல்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அண்மையில் தெரிவித்த கருத்துக்கு இலங்கை மருத்துவ சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் கலாநிதி வின்யா ஆரியரத்ன, இது ஒரு பொறுப்பற்ற அறிக்கை எனவே மன்னிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
மருந்துகளின் தரம் போன்ற முக்கியமான விஷயத்தில் சுகாதார அமைச்சரின் இத்தகைய அறிக்கையை நாம் எதிர்பார்க்க முடியாது. இந்த விஷயத்தில் அவர் முழுமையாக ஆய்வு செய்திருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மருந்துகளின் தரத்தை உறுதிப்படுத்தும் செயல்முறை இருக்க வேண்டும் எனினும், மருந்துகளை மதிப்பிடும் செயல்முறை இலங்கையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது, அதற்காக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் மீது குற்றம் சாட்டப்பட வேண்டும் என்று ஆரியரத்ன மேலும் கூறினார்.