அண்மைய நாட்களில் அல்ஜீரியாவின் பெரிய பகுதிகளில் காட்டுத் தீ பரவியதையடுத்து ஏறக்குறைய 34 பேர் கொல்லப்பட்டதுடன் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.
தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து, தீயில் கருகிய பகுதிகளுக்குத் திரும்பிய சிலர்,தங்கள் வீடுகள், உடமைகள் மற்றும் கால்நடைகளை தீயில் இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
வடக்கு அல்ஜீரியா சமீபத்திய நாட்களில் அதிக வெப்ப அலையை அனுபவித்து வருகிறது. வட ஆபிரிக்காவின் பல பகுதிகளில் வெப்பநிலை வழக்கத்தை விட 7 பாகை செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது.
அல்ஜீரியாவின் வளிமண்டலவியல் திணைக்களம், நாட்டின் வடபகுதியில் இந்த மாத இறுதி வரை 48 பாகை செல்சியஸ்சிற்கும் அதிகமான வெப்பநிலை தொடரும் என எச்சரித்துள்ளது.