அதானி நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை சந்தித்து இலங்கையில் அதானியின் வரவிருக்கும் பணிகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
அமைச்சர் தவல் ஷா மற்றும் மனோஜ் தேஷ்முக் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றதாக ஹரின் பெர்னாண்டோ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பின் போது, இலங்கையில் அதானி நிறுவனத்தின் வரவிருக்கும் பணிகள் தொடர்பிலும் நாட்டில் நிர்மாணிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் பாரிய சூரிய சக்தி திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பில் இலங்கை சுற்றுலா வர்த்தக நாம தூதுவர் சனத் ஜயசூரியவும் கலந்துகொண்டார்.
