ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில், தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் கருத்துரைத்த அவர்,
” தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு உண்மையில் என்ன தீர்வு வேண்டும் என்பதில் பொதுவான கருத்தொற்றுமை இல்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஏனைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பின் 13வது திருத்தம், உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் தமிழ் சமூகத்திற்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தனர்.
இந்தநிலையில், தமிழ் அரசியல் கட்சி உறுப்பினர்களை விரைவில் பொதுநிலைக்கு வர வேண்டும், நாடு நெருக்கடியிலிருந்து விடுபட வேண்டுமானால் ஒற்றுமை அவசியம் ” எனக் குறிப்பிட்டார்.