
இரண்டரை வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்றின் சடலம் களுத்துறை வடக்கு கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், குறித்த குழந்தையின் சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில், குழந்தை காணாமல்போனமை தொடர்பில் இதுவரை பொலிஸாருக்கு முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று வெள்ளிக்கிழமை (28) இடம்பெறவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.