யாழில் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்த முகாமைத்துவக் கழகம்!

முகாமைத்துவக் கழகம் (The Management Club (TMC)) தனது புதிய அத்தியாயத்தை யாழ்ப்பாணத்தில் தொடங்குகியுள்ளது.

கொழும்பு, கல்கிசை, களுத்துறை, மாத்தளை மற்றும் நீர்கொழும்பு ஆகிய நகரங்களில் ஏற்கனவே கிளைகளைக் கொண்டுள்ள நிலையில், தற்போது யாழ்ப்பாணத்திலும் முகாமைத்துவக் கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண முகாமைத்துவக் கழகம் கடந்த மாதம் 17ஆம் திகதி J Hotels இல் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இந் நிகழ்வில் முகாமைத்துவ சபையின் (BOM) விருந்தினர்களும் கொழும்பு முகாமைத்துவக் கழகத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்களும் அழைக்கப்பட்ட விருந்தினர்களும் கலந்து நிகழ்வை சிறப்பித்திருந்தார்கள்.

முகாமைத்துவ சபையின் பிரதிநிதியாக பயாஸ் சலீம், வாழ்நாள் தலைவர் BOM, TMC, கௌசல் ராஜபக்ஷ, தலைவர், BOM, TMC, சண்டிம ஹூலன் கமுவ, உபதலைவர் (நிதி), TMC டீபல் அபயசேகர, TMC(நிகழ்ச்சிகள்), நாஸர் மஜித், TMC (தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடக முகாமைத்துவம்), டுனீஷியா போகொட, TMC (உதவி தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடக முகாமையாளர்) ஆகியோர்கள் பிரசன்னமாகியிருந்தார்கள்.

ஜீட் எம். ஜோசப், வெளியூர் புதிய கழக ஆதரவாளர், ஆலோசகர் குழு உறுப்பினர், BOM, TMC யாழ்ப்பாண முகாமைத்துவ கழகத்தை ஆரம்பிப்பதில் முன்னோடியாக செயற்பட்டிருந்ததுடன், அங்குரார்ப்பண நிகழ்வை தலைமை தாங்கி நடத்தியிருந்தார்.

யாழ்ப்பாண முகாமைத்துவக் கழகத்தின் 2023/2024 ம் ஆண்டுக்கான நிறைவேற்றுக் குழு நிகழ்வில் கலந்து கொண்டவர்களால் தெரிவுசெய்யப்பட்டு பயாஸ் சலீமால் பதவிப்பிரமாணமும் செய்து வைக்கப்பட்டது.

அங்குரார்ப்பண நிகழ்வில் 27 உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டதுடன், அவர்களுக்கு கழக இலட்சினை குத்தப்பட்டதுடன் பரிசுப் பொருளும் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply