இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 50 சதவீதமானவர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும், கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் கணிசமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார்.
மேலும், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் கணிசமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக ஆரியரத்ன மேலும் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், நாட்டில் நாளாந்தம் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், டெங்கு நுளம்பு பரவும் அபாயம் இன்னும் தொடர்வதாகவும் எச்சரித்துள்ளார்.