தெனியாய – அக்குரஸ்ஸ பிரதான வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கான விசேட அறிவிப்பு

மாத்தறை, கொட்டபொல கெட்டபரு தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹெர உற்சவம் காரணமாக நாளை மாத்தறை தெனியாய – அக்குரஸ்ஸ பிரதான வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என இலங்கை பொலிஸார் விசேட அறிவித்தல் விடுத்துள்ளனர்.

மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல, வரலாற்றுச் சிறப்புமிக்க கெட்டபரு தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹெர திருவிழாவின் இறுதி ரந்தோலி பெரஹெரா நாளை வீதி உலா வரவுள்ளது.

இதன்படி, பிற்பகல் ஒரு மணி முதல் குறித்த பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்படுமெனவும், அப்பகுதியினூடாகச் செல்லும் வாகன சாரதிகளை நாளை இரவு பத்து மணி வரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply