பாடசாலைக் கல்வியில் கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட பிற தொழில்நுட்ப கருவிகளை அதிகளவில் பயன்படுத்துவதன் காரணமாக, மாணவர்கள் செயன்முறை ரீதியான கல்வியில் இருந்து விலகும் அபாயம் ஏற்படுவதாக மனநல மருத்துவ நிபுணர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசி பாவனையை தடை செய்ய வேண்டும் என யுனெஸ்கோ அமைப்பு அண்மையில்பரிந்துரைத்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்த யுனெஸ்கோ, பாடசாலைகளின் கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவதைத் தடைசெய்யுமாறு சிறப்பு அறிக்கையை சமீபத்தில் சமர்ப்பித்துள்ளது.
கொவிட் தொற்று நோயின் பின்னர் பாடசாலைகளின் கைடயக்க தொலைபேசி பயன்பாடு, பாடசாலை நேரம் முடிந்த பின்னரும் கைத்தொலைபேசிகளின் பயன்பாடு மற்றும் பல்வேறு வகையான தொழினுட்ப சாதனங்களின் பயன்பாடு மாணவர்களிடையே அதிகரித்துள்ளது.
புத்தகம் படிக்கும் நேரமும் ஆசிரியர்களுடன் இருக்கும் நேரமும் குறைவடைந்துள்ளது.
ஒரு திரையில் தங்கள் வாழ்க்கையில் அதிக நேரத்தை செலவிடுவதால், அவற்றுக்கு விரைவில் அடிமையாகிவிடும் திறன் உள்ளது.இது குழந்தைகளின் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது என்றார்.