அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாடாளுமன்றம் தீர்மானம் எடுக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரத்தை வழங்கியுள்ளார்.
அதற்கேற்ப கட்சித் தலைவர்கள் அவர்களது யோசனையைச் சமர்ப்பிப்பதற்கு இரண்டு வார கால அவகாசம் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.
13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் தன்னிடமில்லை எனவும் நாடாளுமன்றத்திடமே இருக்கின்றது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அண்மையில் இடம்பெற்ற சர்வகட்சிக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
அதன்படி 13 ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பான பொறுப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைகளுக்கு வந்துள்ளது.
இதை நடைமுறைப்படுத்துவது தொடர்பான யோசனையை முன்வைப்பதற்குக் கட்சித் தலைவர்களுக்கு இரண்டு வார கால அவகாசத்தை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான அமைச்சரவை உப குழு அந்த யோசனையை ஆராய்ந்து பார்த்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.