அரசாங்கத்தின் மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் பிரகாரம் முச்சக்கர வண்டிக் கட்டணத்தில் திருத்தம் ஏதும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
முச்சக்கர வண்டி கட்டண ஒழுங்குமுறைக்கு குழுவொன்றை நியமித்துள்ள போதிலும் இதுவரையில் அவ்வாறான ஒழுங்குமுறைகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
முச்சக்கர வண்டி கட்டணக் கட்டுப்பாடு இல்லாததால், அரசாங்கத்தின் முடிவுகளின்படி முச்சக்கர வண்டி கட்டணங்களைத் திருத்த வேண்டாம் என்று சங்கம் முடிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முச்சக்கர வண்டி கட்டண திருத்தம் தொடர்பில் முறையான ஒழுங்குமுறை ஏற்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.