இந்தியாவுடனான போர் என்பது இனி தேவையற்றது என பாகிஸ்தான் பிரதமர் ஷெர்பாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
மேலும், காஷ்மீர் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்குத் தயாராக உள்ளதாகவும் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதம் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அரசாங்க உறவுகள் விரிசல் அடைந்து விட்டன. இச்சூழ்நிலையில் இந்தியாவுடன் போர் நடத்துவது தேவையற்றது என ஷெரீப் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஜம்முகாஷ்மீர் இந்தியாவுக்கான பகுதி எனவும் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது எனவும் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும் பாகிஸ்தான் தீவிரவாதத்தை முழுவதுமாக கைவிடும் வரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்றும் இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.